இந்திய அளவில் மாஸ்டர் டீசர் செய்த சாதனை.!

மாஸ்டர் டீசர் வெளியாகிய 24 மணி நேரத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் ,2 மில்லியன் லைக்குகளையும் பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது .

தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படத்தின் டீசர் சன் தொலைக்காட்சியின் யூடுயூப் சேனலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றதுடன் ,  இதற்கான‌ ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இடம் பிடித்த இந்த டீசர் வெளியாகிய 24 மணி நேரத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களையும் , 2 மில்லியன் லைக்குகளையும் பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.

இந்திய அளவில் அதிக லைக்குகள் மற்றும் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த முதல் டீசர் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்று. சாதனை படைத்த 5 படங்களுக்கான டீசர்களில் விஜய்யின் 3 படங்கள் இடம் பெற்றுள்ளது.அதாவது விஜய்யின் மெர்சல், சர்க்கார் மற்றும் மாஸ்டர் ஆகியவை அதிகளவில் லைக்குகளை பெற்று இந்திய அளவில் சாதனை படைத்த டீசர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment