நான் பாஜகவில் இணையப்போகின்றேனா? இதை விட பெரிய காமெடி இல்லை- நடிகர் சந்தானம்!

நான் பாஜகவில் இணையப்போகின்றேனா? இதை விட பெரிய காமெடி இல்லை- நடிகர் சந்தானம்!

பிஸ்கோத் படம் குறித்து கருத்து கூறிய நடிகர் சந்தானம், அவர் பாஜகவில் இணைவதாக வந்த தகவல் தவறானது எனவும், பிஸ்கோத் படத்தை விட பெரிய காமடி இது தான் எனவும் கூறியுள்ளார்.

ஆர் கண்ணன் அவர்கள் இயக்கி, தயாரித்து வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம் தான் பிஸ்கோத். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடித்துள்ளார். இவருடன் அலிஷா பெர்ரி எனும் நடிகையும் மொட்டை ராஜேந்திரன் அவர்களும் இணைந்து நடித்துள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தீபாவளியன்று நாடு முழுவதிலும் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் சந்தானமும் கண்டுகளித்தார்.

 அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், OTT -யில் படத்தை பார்க்க கூடாது என்பதற்காகத்தான் திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களை மட்டுமே நம்பி சினிமா உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் பூஜையறை OTT என்றால், கோயில் திரையரங்கு எனக்கூறிய அவர், இரண்டு இடத்திலேயும் தெய்வம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இப்படி பயந்து ஒரு படத்தை வெளியிட்டதே இல்லை எனவும், பல தடைகளை தாண்டி பிஸ்கோத்து படம் திரையரங்கில் வெளியிடப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தான் பாஜகவில் இணைய போவதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் தவறானது எனவும், அது பிஸ்கோத் படத்தை விட மிகப் பெரிய காமெடி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *