சட்டவிரோதமாக வேனில் வைத்து 1,200 கிலோ மாட்டிறைச்சி கடத்திய நபர் கைது!

மகாராஷ்டிராவை சேர்ந்த நபர் ஒருவர் 1.44 லட்சம் மதிப்புள்ள 1200 கிலோ மாட்டிறைச்சியை வேனில் வைத்து கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் சட்டவிரோதமாக 1.44 லட்சம் மதிப்புள்ள 1,200 கிலோ மாட்டிறைச்சி கடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய இந்த நபர் தனது வேனில் வைத்து மாட்டு இறைச்சியை கடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வேனை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் இருந்த ஆயிரத்து 200 கிலோ மாட்டு இறைச்சியை பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

மேலும், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து பிவாண்டி தாலுகா காவல் நிலைய போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தடையை மீறுபவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

author avatar
Rebekal