தலயின் கோட்டை மலேசிய -சிறப்பு சர்வே !

நடிகர் அஜீத்  தமிழ் சினிமாவில் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் . அஜித்திற்கு தமிழகம் தாண்டி வெளிநாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அதிலும் மலேசியாவில் அஜித்திற்கு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் இருக்கின்றது, அஜித்தின் தோல்வி படமான விவேகம் கூட மலேசியாவில் ரூ 9 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது படமில்லாமல் மலேசியாவில் விவேகத்தை ரீரிலிஸ் செய்துள்ளனர், இதுவரை வேறு எந்த தமிழ் படங்களும் அங்கு இப்படி ரீரிலிஸ் ஆனதில்லை என்று கூறப்படுகின்றது.

மேலும், வேதாளம் படம் அங்கு ரூ 13 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனை நிகழ்த்தியது, அதை தொடர்ந்து மெர்சல் ரூ 18 கோடி வசூல் செய்து இதை தகர்த்தது தான்.

ஆனால், விஜய்யின் பல படங்கள் தொடர்ந்து மலேசியா பாக்ஸ் ஆபிஸில் பெரிதும் வசூல் செய்யவில்லை, அதே நேரத்தில் அஜித்தின் படங்கள் மலேசியாவில் தொடர்ந்து வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment