• மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
  • 18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  போட்டியிடுகிறது.

நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.

 

மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.

இதேபோல் அவர் கட்சிகளையும் நேரடியாகவும் சாடி வருகின்றார். அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் கருத்துகளை பதிவிடுகிறார்.மேலும் நேரடியாகவும் களத்தில் இறங்கியும் ஈடுபட்டுவருகிறார்.

பின்னர் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.மேலும் இதற்கான நேர்காணலும் நடைபெற்று வருகிறது.அதேபோல் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம்  கட்சிக்கு டார்ச் லைட் சின்னமாக ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் 18 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம்  போட்டியிடுகிது. 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்பமனுக்களை பெறலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here