• பாலிவுட்டின் நடிகர் , இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட அமீர்கான் பிறந்தநாள் இன்று!
  • இந்திய சினிமா மார்கெட்டை சீனா வரை விரிவுபடுத்திய  பெருமை அமீர்கானையே சேரும்!
  • ஒரு படத்திற்காக 120 கிலோவிற்கு மேலேயும், 70 கிலோ வரையிலும் உடல் எடையை மற்றி நடித்தவர் இந்த 54 வயது இளைஞர் அமீர்கான்!

பாலிவுட் சினிமாவில் பல புதிய கதைகளங்களை தேர்வு செய்து நடித்து, புதிய கதைகளங்களை உருவாக்கி இயக்கி ரசிகர்கள் மனதில் நிற்கிறார் நடிகர் அமீர் கான். இவர் சத்யமேவே ஜெயதே எனும் ரியாலிட்டி ஷோ மூலமும் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

வித்யாசமான கதைகளங்களை தேர்வு செய்தாலும் அதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் புதிய உச்சத்தை படைத்து கொண்டிருக்கிறார் அமீர் கான். இவரது படங்கள் மூலம்தான் சீனாவில் இந்திய சினிமாவிற்கென்று புதிய மார்கெட் உருவானது. அதன் மூலம் இந்திய சினிமா சந்தையும் விரிவடைந்து வருகிறது.

எப்படிப்பட்ட கதைகளமாக இருந்தாலும் அதற்கேற்றார் போல தனது உடல் 140 கிலோ வரை ஏற்றியும், 70 கிலோ வரை குறைத்தும் தனது தோற்றத்தை மாற்றக்கூடிய 54 வயது இளைஞர்!

இத்தகைய சிறப்பு மிக்க நல்ல நடிகருக்கு தினச்சுவடு பத்திரிக்கையின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். மேலும் பல நல்ல சினிமாக்களை இந்திய சினிமாவிற்கு தருமாறு ரசிகர்களின் சார்பாக கேட்டுக்ககொள்கிறோம்!

DINASUVADU