கொரோனா இரண்டாம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்ட இந்திய பயணிகள் ரயில்கள் பட்டியல்!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், பல பயணிகள் ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. அதற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுவதால் நாடு முழுவதிலும் ஊரடங்கு உத்தரவுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடு முழுவதிலும் உள்ள போக்குவரத்து சேவைகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இந்திய ரயில்வே சில பயணிகள் ரயில்களுக்கான செயல்பாடுகளை ரத்து செய்துள்ளது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கு ரயில்வே பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த உத்தரவு வரும் வரையிலும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படும் எனவும், ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு அவை முழுமையாக திருப்பித் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal