கேஸ் சிலிண்டர் வெறும் ரூ.9 தான்…! யாருக்கு இந்த சலுகை…! சலுகையை பெறுவது எப்படி…?

கேஸ் சிலிண்டர் வெறும் ரூ.9 தான்…! யாருக்கு இந்த சலுகை…! சலுகையை பெறுவது எப்படி…?

எல்பிஜி நுகர்வோருக்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டரை வெறும் ரூ 9க்கு முன்பதிவு செய்யும் வாய்ப்பினை பேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது.

இன்று அன்றாட தேவைக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வு சாமானிய மக்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. இந்நிலையில், எல்பிஜி நுகர்வோருக்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டரை வெறும் ரூ 9க்கு முன்பதிவு செய்யும் வாய்ப்பினை பேடிஎம் நிறுவனம் வழங்கியுள்ளது. அதாவது, 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி எரிவாயு சிலிண்டர் மானியம் இல்லாமல் ரூ.809 க்கு வழங்கப்பட்டு வருகிறது.

பேடிஎம் சலுகையின் மூலம் ஒருவர் ரூ.800 வரை கேஷ்பேக் பெற முடியும். இதனால் நுகர்வோர் சிலிண்டரை வெறும் ரூ.9 க்கு பெற்றுக் கொள்ளலாம். அதாவது பேடிஎம் மூலம் எரிவாயு  சிலிண்டர் முன்பதிவு செய்யப்படும் போது மட்டுமே இந்த சலுகையை பெற முடியும். ஏப்ரல் 30 வரை இந்த சலுகை செல்லுபடி ஆகும்.

இந்த சலுகை ஆனது முதன்முறையாக பேடிஎம் பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறை பேடிஎம் பயன்படுத்துபவர்கள் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது ரூ.800 ஸ்கிராட்ச் கார்டை பெறுவார்கள். அதாவது இந்த தொகையானது ரூ.10 முதல் ரூ.800 வரை மாறுபடும். இந்தக் ஸ்கிராட்ச் கார்டு 7 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 7 நாட்களக்குள்ளாக இந்த கார்டை திறந்திருக்க வேண்டும்.

தற்போது எல்பிஜி கேஸ் சிலிண்டரை பேடிஎம் மூலம் சலுகை பெறுவது எப்படி என்று பார்ப்போம்.

  • முதலில் உங்கள் மொபைல் தொலைபேசியில் பேடிஎம் பயன்பாட்டை பதிவிறக்க வேண்டும்.
  • பேடிஎம் பயன்பாட்டில் மேலும் காட்டு தகவல் வழியாக உங்கள் சிலிண்டரை  முன் பதிவு செய்ய வேண்டும்.
  • இப்போது ரீ சார்ஜ் மற்றும் பேபில் என்பதை கிளிக் செய்து, சிலிண்டரை முன் பதிவு செய்வதற்கான உங்களது எரிவாயு வழங்குநரை தேர்ந்தெடுக்கவேண்டும்.
  • FIRSTLPG இன் விளம்பர குறியீட்டை உள்ளிட வேண்டும்.
  • முன்பதிவு செய்து 24 மணி நேரத்துக்குள் கீறல் அட்டை கிடைக்கும்.
  • பெறப்பட்ட கீறல் அட்டையை ஏழு நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube