எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே ரூ.42,500 கோடி இழப்பு! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

எல்ஐசி பங்குகள் விற்றதன் மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி லாபம், முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்பனை இன்று பங்குசந்தைகளில் தொடங்கியது. ஐபிஓ முறையில் எல்ஐசி பங்குகளை வாங்கியவர்கள் இனி பங்குசந்தையில் விற்கலாம், அதை விரும்புவோர் வாங்கலாம். ஐபிஓவில் எல்ஐசியின் ஒரு பங்கு ரூ.948 ஆக நிர்ணயம் செய்த நிலையில், பங்குசந்தையில் ரூ.872 ஆக குறைந்து வர்த்தகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், எல்.ஐ,சி பங்கு விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு ரூ.42,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.949-ல் இருந்து 9 சதவீதம் விலை குறைந்தே சந்தையில் பட்டியலிடப்பட்டது. மும்பை பங்குசந்தையில் எல்ஐசி ஒரு பங்கு ரூ.87.20 -க்கு தான் முதல் நாளில் விற்பனைக்கு வந்தது. ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டியிருந்த எல்ஐசியின் சந்தை மதிப்பு ரூ.5.57 லட்சம் கோடியாக சரிவை கண்டுள்ளது.

தேசிய பங்குசந்தையில் எல்ஐசியின் பங்கு ஒன்றின் விலை ரூ.972-ஆக உள்ளது. சந்தையில் விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே பெரும் லாபம் கிடைக்கும் என்று முதலீடு செய்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. சென்செக்ஸ் 750 புள்ளிகள் உயர்ந்துள்ள நிலையிலும் எல்ஐசி பங்குகள் உயராததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால், எல்ஐசி பங்குகள் விற்றதன் மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி லாபம் கிடைத்துள்ளது. எனவே, எல்ஐசியின் பங்கு விற்பனையில் அரசுக்கு லாபம், முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.

இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகள், இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதில் பொதுமக்கள், பாலிசிதாரர்கள், முதலீட்டாளர்கள், சொந்த ஊழியர்களுக்கு 22.13 கோடி பங்குகளை விற்றுள்ளது எல்.ஐ.சி. இதனால் அரசுக்கு ரூ.21,000 கோடி லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here