கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்! – முதல்வர்

மகாத்மா காந்தியின் நினைவுதினத்தை முன்னிட்டு, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். 

மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் மற்றும் முக்கிய அதிகாரிகள் அவரது உருவச்சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்!’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.