முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டு குடும்ப விவகாராம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது!

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் வீட்டில் தற்போது குடும்ப பிரச்சனை பெரியதாகி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.

பீகார் மாநில முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி, லாலு பிரசாத் யாதவின் மகன்களில் ஒருவரான தேஜ் பிரதாப் யாதவுக்கு ஆறு மாதத்திற்கு முன்னர் பீகார் எம்எல்ஏ சந்திரிகாவின் மகன் ஐஸ்வர்யா ராயுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது தேஜ் பிரதாப் யாதவ் மனைவிக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறி, நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்கு தேஜ் பிரதாப் யாதவின் மனைவி ஐஸ்வர்யா ராய் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், தனக்கும் தன் கணவருக்கும் இடையில் சண்டை வருவதற்கு முக்கிய காரணம் தன் கணவரின் சகோதரியான மிசா பாரதிதாசன்தான். அவர்களால் தான் எங்களுக்குள் சண்டை வருகிறது எனவும் குறிப்பிட்டார். மேலும், இந்த வீட்டில் (லாலு பிரசாத் யாதவ் வீட்டில் ) எனக்கு சாப்பாடு யாரும் தருவதில்லை. எங்கள் வீட்டில் இருந்தே எனக்கு சாப்பாடு வருகிறது. இந்த வீட்டு சமையலறையில் என்னை நுழைய விடுவதில்லை. இந்த வீட்டில் உள்ள சமையல்காரன் கூட சமையலறையை பூட்டி போட்டு விட்டு என்னை வெளியே தள்ளுகிறார் எனக் கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மிசா பாரதிதாசன், கணவன் மனைவிக்குள் எந்த பிரச்சனை என்றாலும் உடனே கணவரின் சகோதரி மீது பழிபோடுவது வழக்கமான ஒன்றுதான். கணவன் மனைவி பிரச்சனையில் நான் தலையிடவில்லை என மறுப்பு தெரிவித்தார்,

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.