பொங்கல் ரேஸிலிருந்து பின்வாங்கிய ‘லால் சலாம்’ திரைப்படம்.!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘லால் சலாம்’ உருவாகியுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திரையரங்குகளில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது காரணம் கூறாமல் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளது.

ஆம், இருமுறை ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், பிப்ரவரி 9-ஆம் தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது. தேர் திருவிழாவுக்கு அலப்பறை கிளப்றோம் என்று படக்குழு  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை வைத்து பார்க்கும்பொழுது, பொங்கல் ரேஸிலிருந்து பின்வாங்கியது போல் தெரிகிறது. பொங்கல் தினத்தை முன்னிட்டு,  ஆம், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம், சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படம், அருண் விஜய்யின் ‘மிஷன்- சாப்டர் 1’ படமும் ஒன்றாக மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.