கோயம்பேடு பூக்கள், பழச் சந்தை மாதவரத்திற்கு மாற்றம் – சிஎம்டிஏ.!

நாளை மறுநாள் முதல் மறு அறிவிப்பு வரும் வரை மாதவரம் பேருந்து நிலையத்தில் பூ மற்றும் பழச்சந்தை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயப்பேடு காய்கறி சந்தையில் காய்கறி வியாபாரி, சலூன் கடைக்காரருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து சமீபத்தில் பூ வியாபாரிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால், கோயம்பேடு சந்தையை 3 ஆக பிரித்து கோயம்பேடு, கேளம்பாக்கம், மாதவரம் ஆகிய பகுதிகளில் கடைகளை அமைக்க அதிகாரிகள் முடிவெடுத்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு  தெரிவித்தனர்.

பின்னர், சென்னை மாநகர் ஆணையர் பிரகாஷ் மற்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் , 1900 கடைகளில் 600 கடைகள் மட்டும் சரியான சமூக இடைவெளியோடும், உரிய விதிகளுக்குட்பட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

Image

மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் கோயம்பேடு சந்தையை மூடும் நிலைமை வந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் கூறுகையில், கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை முழுமையாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

பொதுமக்கள் சந்தைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் மறு அறிவிப்பு வரும் வரை மாதவரம் பேருந்து நிலையத்தில் பூ மற்றும் பழச்சந்தை இயங்கும் என தெரிவித்தார்.

author avatar
murugan