உக்ரேனில் 800 இந்திய மாணவர்களை மீட்ட கொல்கத்தா பெண் விமானி..!

கொல்கத்தாவை சேர்ந்த 24 வயது பெண் விமானி,உக்ரைன் போருக்கு மத்தியில் 800 மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி  தொடங்கி 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரினால் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களில் 20,000 ற்கும் மேற்பட்டவர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான பெண் விமானி “மஹாஸ்வேதா சக்ரவர்த்தி”உக்ரைன் ,போலந்து,ஹங்கேரி எல்லையிலிருந்து 800 மாணவர்களை மீட்டு இந்தியாவிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்துள்ளார் .

ரஷ்ய போரினால் கார்கிவ் பகுதியில்,மளிகை பொருட்கள் வாங்க சென்ற போது இந்திய மாணவர் ஒருவர் ஏவுகணை தாக்குதலில் கொள்ளப்பட்டார். இந்த சம்பவத்தையடுத்து இந்தியர்களுக்கு பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்தது. நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி பல உயர்மட்ட கூட்டங்களை நடத்தினார்.மேலும் எதிர்க்கட்சிகளும் விரைவாக இந்தியர்களை வெளியேற்றுமாறு வலியுறுத்தி வந்தது.

இதன் அடிப்படையில் “ஆபரேஷன் கங்கா திட்டம்”அமைக்கப்பட்டு,இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.மேலும் தமிழக அரசு சார்பில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அடங்கிய சிறப்புக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அந்தக் குழு இந்திய வெளியுறவுத் துறையுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள் மூலம் 1,890 பேரை மீட்டுள்ளனர்.

உக்ரேனிய விமானபோக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக் குடியரசு, மற்றும் ரோமானி ஆகிய நாடுகளில் இருந்து மாற்று வழிகளில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சில மத்திய அமைச்சர்களும் எல்லையோர நாடுகளுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 800 மாணவர்களை பாதுகாப்பாக,இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய கொல்கத்தாவை சேர்ந்த பெண் விமானி “மஹாஷ்வேதா சக்கரவர்த்தி”யையும் , இதற்காக பணியாற்றிய குழுவினரையும் பாராட்டி பாஜகவின் பெண்கள் அமைப்பான பாஜக மகிளா மோர்ச்சா ட்விட் செய்துள்ளது.

author avatar
Jeyaparvathi