கோடநாடு வழக்கு – சசிகலாவிடம் 2வது நாளாக விசாரணை தொடங்கியது!

கோடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணங்கள் மற்றும் முக்கிய கேள்விகளுக்கு சசிகலா பதில்.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக வி.கே.சசிகலாவிடம் இரண்டாவது நாளாக விசாரணை தொடங்கியுள்ளது. நேற்று சுமார் 6 மணிநேரம் விசாரித்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் இன்றும் சசிகலாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் கோடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணங்கள் மற்றும் முக்கிய கேள்விகளுக்கு சசிகலா பதில் அளித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.

கோடநாடு எஸ்டேட் பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் சசிகலா என்பதன் அடிப்படையிலும், பங்களா மேலாளர் நடராஜன் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், அவரிடம் நேற்று நீலகிரி எஸ்பி ஆஷிஷ் ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ண மூர்த்தி மற்றும் பெண் போலீசார் உள்ளிட்டோர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில், கோடநாடு பங்களாவில் எவ்வளவு நகை, பணம் இருந்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், 100கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சசிகலா பதில் கூறியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்