18 முதல் 59 வயதினருக்கு இலவச பூஸ்டர் டோஸ் – டெல்லி அரசு!

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று தற்பொழுது அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், 2 டேஸ் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டவர்கள் அடுத்ததாக பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்குவதாக தற்பொழுது டெல்லி அரசு அறிவித்துள்ளது. முன்னதாக 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இந்த போஸ்டர் டோஸை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சுகாதார பணியாளர்கள், முதல்நிலை ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த இலவசமாக வழங்கப்பட உள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்து 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இந்த பூஸ்டர் டோஸை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal