மே 22இல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அதற்க்கு அடுத்த நாள் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த காளியப்பன் என்பவர் கலவரத்தில் சுடப்பட்டார். அதனை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை கமல்ஹாசன் டிவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கலவரத்தில் பலியான குடும்பத்திற்கு ஆறுதல் கூற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் உள்ள தங்கை துக்கம் தாங்காது வருந்துகிறார். அவருக்கு ஆறுதல் கூறுவது போல கமல் பேசியுள்ளார். பிறகு விடீயோவில் பேசும் அவர் அதற்க்கு காரணமான அரசியல்வாதிகள் மீண்டும் ஒட்டு கேட்டு அதே தொகுதிக்கு வருவதாக சாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வருகிற 19ஆம் தேதி ஒட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

https://twitter.com/i/status/1129332755139928064