கமலா ஹாரிஸ் வெற்றிக்கு பின் இந்த இறைச்சியை உண்டார்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கமலா ஹாரிஸ் வெற்றிக்கு பின் இந்த இறைச்சியை உண்டார்.

கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில், அதிபர் தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். இதனையடுத்து, அதிபராக ஜோ பைடனும், துணையாய் அதிபராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கமலா ஹாரிஸ் தேர்தல் வெற்றிக்கு பின் மகிழ்ச்சியில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டதாக கூறி இணையத்தில், புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர் இந்த மாட்டு இறைச்சியை உண்டதால், இவர் பாதி பிராமணராகிவிட்டார். அதாவது  எதிரியாகிவிட்டார் என்ற தகவல்கள் பகிரப்பட்டு வந்தது.

இந்த வைரல் பதிவு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் இந்த வைரல் புகைப்படம், கடந்த ஆண்டு எடுக்கப்பட்டது என்றும், புகைப்படத்தில் கமலா ஹாரிஸ் உண்பது பன்றி இறைச்சி என்பதும் தெரியவந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.