• தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை.
  • பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேள்வி கேட்டு கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தையே சில தினங்களாக உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. கடந்த 7 ஆண்டுகளாக சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும்  நபர்கள் கொண்ட கும்பல்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டமும் போடப்பட்டது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அவர் வெளியிட்ட வீடியோவில் , புகார் கொடுத்த பெண்ணின் பெயர் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் போராட்டம் நடத்த வந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்படுகின்றனர், பொள்ளாச்சி கொடூரச் சம்பவத்திற்கு தமிழக முதல்வராக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? …

பெண்ணைப் பெத்த எல்லோருக்கும் பதறுகிறதே. உங்களுக்கு பதறவில்லையா. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை எனக் கூறுவதில் உள்ள மும்முரம், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனையை அரசு உறுதி செய்யும் எனக் கூறுவதில் இல்லையே.

ஜெ. வழியில் ஆட்சி செய்யும் அரசு பொள்ளாச்சி விவகாரத்தில் எப்படி மெத்தனமாக இருக்கமுடியும்?.. வீடியோக்களை குற்றவாளிகள் அழித்துவிட்டதாக கூறும் நிலையில் எப்படி வெளியானது? மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.குற்றவாளிகள் மட்டுமின்றி காப்பாற்ற துடிப்போருக்கும் தண்டனை உண்டு என்று தெரிவித்துள்ளார்.