• மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ் உள்ளிட்ட  கட்சிகள் இணைந்துள்ளது.  
  • திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளது.பின்னர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர்  தமீமுன் அன்சாரியை தொடர்பு கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.