நகர்புற உள்ளாட்சி தேர்தல்: 10 நாட்கள் தொடர் பிரச்சாரத்தில் கமல்ஹாசன்..!

அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 10 நாட்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து,  அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கான இட பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை மாவட்ட வாரியாக அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து 6-ம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை அதாவது 10 நாட்கள் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான 6 கட்ட வேட்பாளர் பட்டியலை  அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.