பிகிலை முந்தும் கைதி – எகிரும் திரை அரங்குகளின் எண்ணிக்கை

பிகிலை விட கைதி திரைப்படத்தின் திரை அரங்குகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
தீபாவளி  விருந்தாக கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படங்கள் தான் பிகில் மற்றும் கைதி.இரு படங்களும் கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரண்டு படங்களும் வெளியானது.
கைதியை விட பிகில் திரைப்படம்  அதிக அளவில் திரை அரங்குகளில் வெளியானது.ஆனால் கைதி படத்திற்கு  தொடர்ந்து நல்ல விதமான விமர்சனங்கள் வந்த வண்ணமே உள்ளது.இதனால் கைதி படம் வெளியான முதல் இரண்டு நாட்களை விட  தற்போது  திரை அரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.கேரளா,தெலுங்கானா மற்றும் இலங்கை என்று பல இடங்களிலும் திரை அரங்கம் அதிகரித்து வருகிறது. பிகிலை விட கைதி திரைப்படத்தின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.