#JustNow: கல்வி அமைச்சர்கள் மாநாடு – தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் புறக்கணிப்பு.

குஜராத்தில் நடைபெறும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. NEP தொடர்பாக குஜராத்தில் இன்றும், நாளையும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. இன்றும், நாளையும் குஜராத்தில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாதிக்க மாநாடு நடைபெறுகிறது.

கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். மாநாட்டிற்கு அழைப்பு வந்தபோதும் அதில் பங்கேற்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெறும் மாநாட்டிற்கு மாநில கல்வி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment