#BREAKING: கொரோனா அதிகரிப்பு – மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை!

கொரோனா பரவல் நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் கடிதம்.

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில், கவனம் தேவை என கூறியுள்ளார்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த சில வாரங்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம் என தெரிவித்துள்ளார். ஏப்ரல் 15-ஆம் தேதி நிலவரப்படி 22-ஆக இருந்த பாதிப்பு, தற்போது 100-ஆக பதிவாகி வருகிறது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment