பா.ஜ.க-வுடன் இணைகிறதா த.மா.கா. ? ஜி.கே.வாசன் விளக்கம்

பாஜகவுடன் இணையமாட்டோம் என்று  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.அவருடன் பேசிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஜி.கே.வாசன்.அப்பொழுது அவர் கூறுகையில், பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் இணையும் என்ற செய்தி வதந்தி என்று தெரிவித்தார்.
மேலும் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடியை சந்தித்து 20 நிமிடம் பேசினேன்.தமிழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசினேன் என்று தெரிவித்தார் ஜி.கே.வாசன் .