தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் -அமைச்சர் ஜெயக்குமார்

தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார்  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தண்ணீர் பிரச்சினைக்கு எடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளை, எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும். திமுக எதிரி கட்சியாக உள்ளது.திமுகவின் போராட்டம், வெற்று போராட்டம் ஆகிவிடும்.
தங்க தமிழ்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம், அனைவரும் இணைந்து அதிமுக தேரை இழுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.