நிச்சயமாக எனக்கு நல்ல பெயர் வாங்கி தரும் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த கனா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை மற்றும் விக்ரம் பிரபுவின் வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் ஐஸ்வர்யா தங்கையாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு கதாபாத்திரம் தான் முக்கியம்.

இந்த இரு படங்களிலும் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் என்பதால் ஒப்புக்கொண்டதாகவும், இந்த இரு படங்களும் நிச்சயமாக எனக்கு நல்ல பெயர் வாங்கி தரும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.