புதுப்படத்துக்கு சிம்பு கேட்ட சம்பளம்? தெறித்தோடிய பிரபல தயாரிப்பு நிறுவனங்கள்?

Simbu : நடிகர் சிம்பு தற்போது தனது 48-வது திரைப்படமான ‘STR48’ திரைப்படத்திற்காக தயாராக வருகிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்குகிறார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி  பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்காமல் இருக்கிறது.

READ MORE- அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு சித்தார்த் போட்ட கண்டிஷன்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியாகி இருந்தது. ஆனால், படத்தின் தலைப்பு என்னவென்று மற்றும் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் இசையமைப்பாளர் யார் என்று எந்த தகவலும் இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது.

READ MORE – சும்மா கிளப்பி விடாதீங்க! ‘கில்லி ரீ-ரீலீஸ்’ குறித்து குண்டை தூக்கிப்போட்ட தயாரிப்பாளர்.!

இந்த  நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு  தொடங்க தாமதமாகும் என்பதால் சிம்பு அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால் இந்த திரைப்படம் இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் அதற்குள் ஏதாவது சின்னதாக ஒரு படம் செய்யலாம் என்ற எண்ணத்தில் சிம்பு  இருக்கிறாராம்.

read more- யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!! 

இதனால் உடனடியாக பிரபல தயாரிப்பு நிறுவனங்களான சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு நாம் இணைந்து ஒரு  படம் பண்ணலாம் என்று இரண்டு தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.  அவர்களும் சிம்புவே கால் செய்து படம் பண்ணலாம் என்று கேட்டவுடன் சந்தோஷமாக படம் செய்யலாம் என்று கூறினார்களாம்.

READ MORE – தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியீட்டு விளக்கம் கொடுத்த சிவகுமார்!

பேசி முடித்த பிறகு சிம்பு தனக்கு நடிக்க சம்பளமாக இவ்வளவு கோடி வேண்டும் என்று ஒரு தொகையை கேட்டாராம். அதற்கு உடனடியாகவே அந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்களும் பேச்சுவார்த்தை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்பது போல தெரித்து ஓடிவிட்டதாம் இந்த தகவலை பிரபல யூடியூப் சேனல் ஆன வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment