பள்ளிகள் திறந்ததால் தான் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தவறான கருத்து – அமைச்சர் சுப்பிரமணியன்

பள்ளிகள் திறந்ததால் தான், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என கூறுவது, ஒரு தவறான புரிதல்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வந்ததையடுத்து, செப்.1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் வழிகாட்டு நெறிமுறைகளை கைக்கொண்டு செயல்பட வேண்டும் என அறிவியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், சில மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, இதுகுறித்து சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில், பள்ளிகள் திறந்ததால் தான், மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என கூறுவது, ஒரு தவறான புரிதல். பள்ளிக்கு வந்த அன்றே தொற்று ஏற்படுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அவர்களுக்கு ஏற்கனவே தொற்று பாதிப்பு இருந்திருக்கும். எனவே, பள்ளிக்கு வந்த பின் அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தொற்று பரவாமல் இருக்க உடனடியாக அவர்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள் என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம். தொற்று கண்டறியப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.