அதிமுக பொதுச்செயலாளர் செங்கோட்டையான ?எடப்பாடி பழனிசாமியா?பரபரப்பை ஏற்படுத்தும் போஸ்டர்கள்

அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இன்று ( ஜூன் 12-ஆம் தேதி) அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்ட  அறிவிப்பில்,இன்று (ஜூன் 12-ஆம் தேதி) காலை 10 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்தது.

அதன்படி சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது.ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் பொதுச்செயலாளராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே  அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. புதிய போஸ்டர்களால்  அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது