தென் ஆப்பிரிக்க வீரர் லான்ஸ் குளூஸ்னரை போல ஹர்திக் பாண்டிய அதிரடி வீரர் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறி உள்ளார்.

லண்டனில் நேற்று இது குறித்து பேசும் போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி  வீரர் ஹர்திக் பாண்டியா அபாரமாக விளையாடினார். 27 பந்தில் 48 ரன்கள் குவித்தார். இதைப் பார்க்கும்போது 1999 ஆம் ஆண்டு உலககோப்பையில் தென் ஆப்பிரிக்க வீரர் லான்ஸ் குளூஸ்னர் விளையாடியது நினைவிற்கு வருகிறது.

லான்ஸ் குளூஸ்னரை போல அதிரடி வீரராக ஹர்திக் பாண்டியா உள்ளார். ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் எதிரணியை  பலவீனப்படுத்தியது போட்டியை வெற்றியுடன் முடித்து வைக்கும் திறமை  கொண்டவர்.

இவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. கடந்த 09-ம் தேதி நடந்த போட்டியில் சில வாய்ப்புகளை ஆஸ்திரேலிய அணி தவற விட்டனர். அதுவே ஆஸ்திரேலிய அணி தோல்வி பெற காரணம்.

போட்டியின் போது மைதானத்தில் ஸ்மித்திற்கு எதிராக கோஷமிட்டனர்.அப்போது ரசிகர்களிடம் ஸ்மித்தை உற்சாகப்படுத்துங்கள் என கூறியது விராட் கோலியின்  பெருந்தன்மையை காட்டுகிறது என கூறினார்.