அட நம்ம யோகிபாபுவுக்கு கல்யாணமா?

  • காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம். 
  • இந்த கோவிலில் தான் திருமணமாம்.

நடிகர் யோகி பாபு தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவராவார். இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில், இவர் எங்கு சென்றாலும், இவரிடம் முதலில் பார்ப்பவர்கள் கேட்கக் கூடிய கேள்வி. ‘எப்போது கல்யாணம்’ என்ற கேள்வி தான்.

இந்நிலையில், யோகிபாபு பார்கவி என்ற நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யவுள்ளாராம். இவரது திருமணம் பிப்.5-ம் தேதி, திருத்தணி முருகன் கோவிலில் வைத்து நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, நடிகர் யோகிபாபு அவர்கள் கூறுகையில், ”பெற்றோர் பார்த்த பெண் தான். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். என் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்பவராக தேடினேன். அதே குணத்துடன் பெண் கிடைத்துவிட்டார்.” என்று பார்கவி குறித்து கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.