பெட்ரோல் விலை ஏற்றத்தால் போர்க்களமான ஈரான்! 100கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல்!

ஈரான் நாட்டில் மக்கள் ஏழ்மையை போக்குவதற்காக புதிய விலையேற்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. அதாவது பெட்ரோல் விலையை ஏற்றி அதன் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க திட்டமிப்பட்டுள்ளது.
இதன் மூலம் 60 லிட்டருக்கு மேல் பெட்ரோல் வாங்கும் ஒருவர் அடுத்து வாங்கும் ஒவ்வொரு பெட்ரோல்  1 லிட்டர் பெட்ரோல் 10 ஆயிரம் ரியலுக்கு பதில் 30 ஆயிரம் றிலாய் கொடுக்க வேண்டும். இதனை கண்டித்து ஈரானில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் பகுதி போன்ற முக்கிய நகரங்களில் இந்த போராட்டம் தீவிரமடைந்தது. அப்போது, பல பெட்ரோல் பங்குகளுக்கு தீவைக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில்  100க்கும் மேற்பட்டவரக்ள் இறந்துவிட்டனர். என சர்வதேச மனித உரிமை அமைப்பான ‘அம்னெஸ்டி’ அமைப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.