#IPL2022: முதலிடத்தை கைப்பற்றப்போவது யார்? குஜராத் – ஹைதராபாத் அணிகள் மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40-வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 40-வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடக்கத்தில் ஹைதராபாத் அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வந்ததை தொடர்ந்து, தற்பொழுது அந்த அணி அதிரடியாக ஆடி புல்லிபட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது.

மொத்தமாக 7 போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் அணி, 5 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதனைதொடர்ந்து குஜராத் அணி, அதிரடியாக பார்மில் இருக்கின்றது. 7 போட்டிகளில் விளையாடிய அந்த அணி, 6 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது. அதனால் இன்றைய போட்டி, ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் XI:

குஜராத் டைட்டன்ஸ்:

ஷுப்மன் கில், விருத்திமன் சாஹா (விக்கெட் கீப்பர்), அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் தேவாதியா, டேவிட் மில்லர், அல்ஜாரி ஜோசப், ரஷித் கான், யாஷ் தயால், லாக்கி பெர்குசன், முகமது ஷமி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஐடன் மார்க்ரம், ராகுல் திரிபாதி, ஷஷாங்க் சிங், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), புவனேஷ்வர் குமார், ஜெகதீஷா சுசித், உம்ரான் மாலிக், மார்கோ ஜான்சன், நடராஜன்