#IPL2021: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு!

சென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் மும்மரம் காட்டி வருகிறது. இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியான ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றன.

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை 18 புள்ளிகளுடன் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் இப்போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடத்தில் தக்க வைத்துக்கொள்ளும்.

மறுபக்கம் புள்ளி பட்டியலில் 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில இருக்கு ராஜஸ்தான் அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமானது. இதில் வெற்றி பெற்றால், இன்னும் ஒரு சில போட்டிகளில் முடிவை பொறுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. இதனால் இரண்டு அணிகளும் வெற்றி பெறுவதில் தீவிரம் காட்டுவார்கள்.

இதுவரை இரு அணிகள் மோதிய போட்டியில் சென்னை 15 முறையும், ராஜஸ்தான் அணி 9 முறையும் பெற்றுள்ளனர். இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் சென்னை 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்றைய தினத்தின் 47வது லீக் போட்டியில் விளையாடும் ராஜஸ்தான், சென்னை ஆகிய இரு அணிகளின் வீரர்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (w/c), சிவம் துபே, க்ளென் பிலிப்ஸ், டேவிட் மில்லர், ராகுல் தேவாடியா, ஆகாஷ் சிங், மயங்க் மார்கண்டே, சேத்தன் சகாரியா, முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்/கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ஷர்துல் தாக்கூர், கேஎம் ஆசிஃப், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்