முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது வழக்கு பதிவு!

சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டங்களை வைத்திருந்ததாக முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது வழக்குப்பதிவு.

முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டங்களை வைத்திருந்ததாக வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி வெங்கடாசலம் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் 13 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப் பணமும், 11 கிலோ தங்கமும், மரத்தில் இருந்து செய்யப்பட்ட பொருட்கள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியதாக கூறப்பட்டது. சந்தன கட்டைகளால் ஆன பொருட்கள் கைப்பற்றப்பட்டதால் நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். தமிழக வனத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்