#IPL2020:இன்று முட்டும் SRHvsRCB..!கொக்கரிக்குமா..?

IPL2019ல் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது இம்முறையாவது நல்ல நிலையில் விளையாடும் என்று நம்பபடுகிறது.மேலும் அந்த அணிக்கு புதிதாக அணிக்கு வாங்கப்பட்டுள்ள ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக களமிரறங்க உள்ளார். இது அவர் கால்பதிக்கும் 8வது அணி என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பெங்களூர் அணி தரப்பில் கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ் ஜோடி வழக்கம் போல் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் அதே போல் பந்து வீச்சில் சாஹல், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் ஆகியோர்  பலம் சேர்ப்பார்கள்.மேலும் நடப்பாண்டு வெற்றி கணக்குடன் தொடங்கும் முனைப்பில் வியூகங்களை தீட்டியுள்ளது.

author avatar
kavitha