IPL 2018:கூச்சமே இல்லாம பதில் கூறிய விராட் கோலி!நான் வில்லியர்ஸ்ஸ பார்த்து தான் எப்டி விளையாடனும்னு கத்துக்கிட்டேன் !

 இந்திய கேப்டன் விராட் கோலி,தென் ஆப்பிரிக்காவில் திறம்பட பேட்டிங் செய்வது எப்படி என்பதை ஏ.பி.டிவில்லியர்ஸிடமிருந்து அவருக்குத் தெரியாமலேயே மானசீகமாகக் கற்றுக் கொண்டதாக  தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் 5 மற்றும் 28 ரன்களை எடுத்து கோலி சற்றே தடுமாறினார், ஆனால் செஞ்சூரியனில் இந்திய ரகப் பிட்சாக இருந்தாலும் ரபாடா, பிலாண்டர், மோர்கெல் அடங்கிய பந்து வீச்சுக்கு எதிராக 153 ரன்களை அபாரமான முறையில் எடுத்தார் விராட்.

அதன் பிறகு ஒருநாள் தொடரில் 3 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் என்று வெளுத்துக் கட்டினார்.இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் விளக்கிய விராட் கோலி, “சமீபத்தில் தென் ஆப்பிரிக்க தொடரில் அவரிடமிருந்து நான் சில விஷயங்களை பேட்டிங்கில் கற்றுக்கொண்டேன், அவரைப் பார்த்து சிறு மாற்றம் செய்து கொண்டேன். ஆனல் அதை அவரிடம் நான் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

Image result for virat kohli & ab de villiers 2018 ipl

நான் என் ஸ்டான்ஸில் பந்து வருவதற்கு முன்பாக மட்டையை பிட்சில் தட்டியபடியேதான் நிற்பேன். இது பந்துகள் அதிகம் ஸ்விங் ஆகாத குறைந்த ஓவர் போட்டிகளில் எனக்குக் கைகொடுத்தது.

ஆனால் தென் ஆப்பிரிக்கா தொடரில் டிவில்லியர்ஸ். பும்ரா பந்தில் தொடர்ந்து பீட்டன் ஆகிக்கொண்டிருந்தார், ஆனால் பந்துக்கு மட்டையைக் கொண்டு செல்லவில்லை இதனால் எட்ஜ் எடுக்கவில்லை. ஏனெனில் டிவில்லியர்ஸ் தான் எதைச் செய்தாரோ அதனைச் சரியாகச் செய்பவர்.

ஏன் அவருக்கு மட்டும் எட்ஜ் எடுக்கவில்லை என்று ஆச்சரியமடைந்து வீடியோக்களைப் பார்த்தேன். அதைப் பற்றி நன்கு ஆராய்ந்தேன். அப்போதுதான் தெரிந்தது அவர் தலை சாயவோ, அசையவோ இல்லை பந்தை எதிர்கொள்ளும் முன் அவரது ஸ்டான்சில் தலை நிலையாக இருந்தது. மட்டையை அவர் கீழே தட்டிக் கொண்டேயிருக்கவில்லை. அதைப்பார்த்து நானும் மட்டையை கீழே கொண்டு போய் தட்டித்தட்டிவிட்டு நிமிரும் பழகத்தை நிறுத்திக் கொண்டு நேராக நிமிர்ந்து பந்தைப் பார்க்கத் தொடங்கினேன். அதன் பிறகு எனக்கு ரன்கள் வந்தது.

Image result for virat kohli & ab de villiers 2018 ipl

டெஸ்ட் தொடரில் இதனை நான் மானசீகமாகக் கற்றேன், ஆனால் அவரிடம் இதுவரை இதுகுறித்து நான் தெரிவிக்கவில்லை” என்று கூறினார் விராட் கோலி. நம் சச்சின் டெண்டுல்கர் கூடத்தான் தலையை நேராக நிமிர்த்தி நேர் கொண்ட பார்வையில் பந்தை எதிர்கொள்வார். சரி! யாரிடம் கற்றுக் கொண்டால் என்ன? கற்றுக் கொண்டதை வெளிப்படையாகத் தெரிவித்த வகையில் விராட் கோலியின் பெருந்தன்மை பாராட்டுக்குரியதே

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment