உலக ஹாக்கி போட்டியை காண முதல்வருக்கு அழைப்பு..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒடிசாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளைக் காண அழைப்பு. 

உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரூர்கேலாவில் வரும்  13ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒடிசாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளைக் காண வருகை தர வேண்டுமென அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள் எழுதிய கடிதத்தை, ஒடிசா அமைச்சர் அடானுசப்யசாசி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வழங்கினார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment