#INDvsSA:டி20 கோப்பையை கைப்பற்றப் போவது யார் ? – இந்தியா-தென்னாப்பிக்கா இடையே இன்று கடைசி போட்டி!

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி,தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இளம் வீர்ரகளை கொண்டு களமிறங்கிய ரிஷப் பந்த் தலைமையிலான இந்திய அணி தோல்வியுற்றது.

இதனையடுத்து,நடைபெற்ற டி20 தொடரின் 3-வது போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி,20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 19.1 ஓவர் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால்,48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

அதன்பின்னர்,நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 4-வது டி-20 போட்டியில் இந்திய அணியினர் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தனர்.இதனைத்தொடர்ந்து,வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் ஆல் அவுட் ஆகி 87 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இதனால்,இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில்,இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது.இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளதால்,இத்தொடரைக் கைப்பற்றி கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணியினருமே தீவிரம் காட்டி வருகின்றனர்.எனவே,இப்போட்டியில் வெற்றி பெற்று டி-20 கோப்பையை கைப்பற்றப்பவது யார்? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சாத்தியமான இந்தியா லெவன்:ருதுராஜ் கெய்க்வாட்,இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர்,ரிஷப் பந்த்(கேப்டன் & வி.கீப்பர்),ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்,அக்சர் படேல்,ஹர்ஷல் படேல்,புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்,அவேஷ் கான்.

சாத்தியமான தென்னாப்பிரிக்கா லெவன்:டெம்பா பாவுமா (கேப்டன்), குயின்டன் டி காக் (வி.கீப்பர்),டுவைன் பிரிட்டோரியஸ்,ராஸ்ஸி வான் டெர் டுசென்,ஹென்ரிச் கிளாசென்,டேவிட் மில்லர்,வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா,கேசவ் மகாராஜ்,அன்ரிச் நார்ட்ஜே,லுங்கி என்கிடி.

Leave a Comment