தொண்டர்களே…அக்னிபத் போராட்டம்;இதனை கொண்டாட வேண்டாம் – ராகுல் காந்தி முக்கிய வேண்டுகோள்!

தனது பிறந்தநாளை இன்று கொண்டாட வேண்டாம் என்று காங்கிரஸ் தொண்டர்களை ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,ஜம்மு காஷ்மீர்,டெல்லி,அரியானா,உத்தர பிரதேசம்,பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும்,பல பகுதிகளில் பாஜக அலுவலகம் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.அதேசமயம்,பேருந்துகளை அடித்து நொறுக்கியும், ரயில்களுக்கு தீ வைத்தும் இளைஞர்கள் ஆவேச நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,அக்னிபத் போராட்டத்திற்கு மத்தியில் தனது பிறந்தநாளான இன்று (ஜூன் 19ஆம் தேதி) எந்த விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபட வேண்டாம் என்று கட்சி தொண்டர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும்,அக்னிபத் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் இளைஞர்கள் வேதனையடைந்து தெருக்களில் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களுடன் நிற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“எனது பிறந்தநாளை முன்னிட்டு எந்த விதமான கொண்டாட்டங்களையும் நடத்த வேண்டாம் என நாடு முழுவதும் உள்ள அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும்,எனது நலம் விரும்பிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

“நாட்டில் நிலவும் சூழ்நிலைகள் கவலையளிக்கின்றன. கோடிக்கணக்கான இளைஞர்கள் வேதனையில் உள்ளனர்.இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வலியைப் பகிர்ந்துகொண்டு அவர்களுடன் நிற்க வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Leave a Comment