3 விக்கெட்டை இழந்து இந்திய அணி முதல் நாளிலேயே தடுமாற்றம்..!

இந்திய அணி தற்போது 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதனையடுத்து, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனால், தற்போது இந்தியா 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலே கே.எல் ராகுல் ரன் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களம் கண்ட புஜாரா 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து விக்கெட் இழந்ததால் கேப்டன் கோலி முதல் 2 போட்டிகளில் சரியாக விளையாடாததால் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், ரசிகர்கள் எதிர்ப்பட்டது போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல்  7 ரன் எடுத்து விராட் பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். இந்திய அணி இழந்த 3 விக்கெட்டையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பறித்தார். அதிலும், குறிப்பாக கே.எல் ராகுல், புஜாரா, கோலி 3 பேரும் ஜோஸ் பட்லரிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தற்போது 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ரோஹித் 14, ரகானே 16 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

author avatar
murugan