#BREAKING : சென்னையில் மழைநீர் சேகரிப்பு குழியில் விழுந்த இருவர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒருவரும் மீட்பு….!

சென்னையில் மழைநீர் சேகரிப்பு குழியில் விழுந்த 3 பேரில் இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒருவரை மீட்கும் பணி தீவிரம். 

சென்னையில், வண்ணாரப்பேட்டையில் தாண்டவராயன் தெருவில் புதிதாக கண் மருத்துவமனை கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது .கட்டிடத்தின் பின்புறத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க குழி தோண்டும் பணியில் 5 பேர் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென்று மண் சரிந்ததில் விழுப்புரத்தை சேர்ந்த வீரப்பன், ஆகாஷ் மற்றும் சின்னத்துரை ஆகியோர் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். இதனையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஆகாஷையும், வீரப்பனையும் உயிருடன் மீட்டனர். வீரப்பன் மற்றும் ஆகாஷ் இருவரையும் சிகிச்சைக்காக  அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், சின்னத்துரையை மீட்கும் பணியில் கடந்த 2 மணி நேரமாக தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அவரை மீட்டுள்ளனர். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.