இந்திய கடலோர காவல்படையின் சாகச நிகழ்ச்சி!

காரைக்கால் கடல்பகுதியில் இந்திய கடலோர காவல்படை உதய தின விழாவை முன்னிட்டு  நடைபெற்ற சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலில் கடலோர காவல் படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தி காண்பிக்கப்பட்டன.

நடுக்கடலில் போரிட்டு கடற்கொள்ளையர்களிடமிருந்து கப்பலைக் காப்பாற்றுவது, கப்பலில் ஏற்படும் தீ விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவது, ஹெலிகாப்டரில் இருந்து கடலில் இறங்குவது உள்ளிட்ட பல சாகச நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டப்பட்டன.

நிகழ்ச்சியில் கடலோர காவல்படை டி.ஐ.ஜி கைலாஷ் மேகி, நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், கடலோர காவல்படை அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கப்பலில் 4 மணி நேரம் பயணம் செய்து சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment