இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா

இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,  மக்கள் தங்கள் தாய்மொழியுடன் இந்தியையும் பயில வேண்டும்.ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால், ஒரே மொழி அவசியம்.ஒரே மொழியால் ஒற்றுமையை கட்டமைக்க முடியும் என்றால், அது இந்தி மொழியே.இந்தி மொழி அதிகமான மக்களால் பேசப்படும் மொழியாகும்.இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று பதிவிட்டுள்ளார்.