இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா.? டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!

IND vs NZ: ஒருநாள் உலக கோப்பைப் போட்டியில் 45 லீக் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 2 அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என இன்னும் 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. இதில் முதல் அரையிறுதி போட்டியானது இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் இரண்டு பலம் வாய்ந்த அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். ஏனென்றால் கடந்த உலக கோப்பை அரையிறுதியில், நியூசிலாந்து அணியிடம் அடைந்த தோல்வியை, இன்று வெற்றியாக மாற்ற உள்ளது.

IPL2024: சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்படும் நட்சத்திர வீரர் இவர்தான்.! வெளியான தகவல்..

இந்திய அணி பக்கமே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இத்தொடரில் இந்தியா விளையாடிய ஒரு லீக் போட்டியில் கூடத் தோல்வியடையவில்லை. இதனால் 18 புள்ளிகளுடன் புள்ளி விவரப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 5 போட்டியில் வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை 117 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 59 முறை இந்தியாவும், 50 முறை நியூஸிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகள் முடிவுகள் இல்லாமல் முடிந்துள்ளன. நடப்புத் தொடரில் கூட தர்மசாலாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

அதேபோல மும்பை மைதானமும் இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்புத் தொடரில் நடைபெற்ற நான்கு போட்டிகள் இந்த வான்கடே மைதானத்தில் நடைபெற்றுள்ளன. அதில் 3 போட்டிகளில் முதலாவதாக பேட் செய்த அணியும், ஒரு போட்டியில் மட்டுமே இரண்டாவதாக பேட் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளது.

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.!

எனவே, இந்த போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் முதல் அரையிறுதிப் போட்டியானது தொடங்கியுள்ளது. இதில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியா

ரோஹித் சர்மா (C), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (W), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

நியூசிலாந்து

டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் (C), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டாம் லாதம் (W), மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.