அசுர வேகத்தில் பரவும் கொரோனா.! இந்தியாவில் 223 ஆக உயர்வு.!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவி வருவதால் மத்திய அரசு கொரோனாவை தேசிய பேரிடராக அறிவித்தது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. அதில் 32 பேர் வெளிநாட்டவர்கள் என்று தெரிவித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு வெளிநாட்டவர் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவால் இறந்தவர்கள் 64 வயதுக்கு மேற்பட்டவர்கள் என குறிப்பிடப்படுகிறது. 

மேலும் 6,700க்கு மேற்பட்டோரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேரும், கேரளாவில் 26, உத்தரபிரதேசம் 22, டெல்லி 16, கர்நாடகா 15, ராஜஸ்தானில் 15 பேரும் கொரோனவால் பாதித்தித்துள்ளனர். இதில் டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், மகாராஷ்டிராவில் தலா ஒருவர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்