கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206ஆக  உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில் இன்று  இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

காணொலி மூலம் நடைபெறும்  இந்த ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார்.நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றிய நிலையில் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan