எந்த மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி அதிகளவில் மீதம் உள்ளது? எண்ணிக்கையை வெளியிட்டுள்ள மத்திய அரசு!

எந்தெந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி எவ்வளவு மீதம் உள்ளது என்பது குறித்த எண்ணிக்கையை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாடு முழுவதும் இறந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் இன்றி மருத்துவமனை நிர்வாகமும் திணறி வருகிறது. இதனை அடுத்து மத்திய அரசாங்கம் வருமுன் காப்பதற்கான தடுப்பூசிகள் தற்போது நாடு முழுவதும் போட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

இதனால் தடுப்பூசிக்கான தட்டுப்படும் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எந்த மாநிலத்தில் எவ்வளவு தடுப்பூசி மீதும் உள்ளது என்பது குறித்த எண்ணிக்கையை தற்பொழுது மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதாவது உத்தரபிரதேச மாநிலத்தில் தான் அதிக அளவில் தடுப்பூசி மீதமுள்ளதாம். இரண்டாவது பீகார், இந்த இரு மாநிலங்களிலும் தடுப்பூசி அதிகளவில் மீதம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்திரப்பரதேசத்தில்11,80,569 தடுப்பூசிகள் மீதமுள்ளது எனவும், 8,36,283 தடுப்பூசிகள் பீகாரில் மெதமுள்ளதாம். மகாராஷ்டிராவில் 7.49 லட்சமும், ஜார்கண்டில் 6.46 லட்சமும், டெல்லியில் 5.62 லட்சமும், கர்நாடகாவில் 5.57 லட்சமும், அஸ்ஸாமில் 5.49 லட்சமும், மேற்கு வங்கத்தில் 4.94 லட்சமும், குஜராத்தில் 4.62 லட்சமும், ராஜஸ்தானில் 3.70 லட்சமும் தடுப்பூசிகள் மீதம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal