தேர்தல் பிரச்சாரத்தில் வாய் உலறும் அரசியல்வாதிகள்….. கலாய்க்கும் தொண்டர்கள்….

15
  • மதுராந்தகம் மக்களவை தொகுதி வேட்பாளரான மரகதம் குமாரவேலுக்கு பதிலாக, மரகதம் சந்திரசேகர் என்று பெயரை மாற்றி கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகமெங்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது.

இந்நிலையில், அனைத்து கட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. அதிமுகவின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மதுராந்தகம் தொகுதியில், மக்களவை வேட்பாளர் மரகதம் குமரவேலுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், கொடநாடு விவகாரத்தில் என்னை குற்றப்படுத்துவது வேடிக்கையாக உள்ளது என்றும், கொடநாடு விவகாரத்தை வெளியில் கொண்டு வந்ததே நாங்கள் தான் என்றும் கூறியுள்ளார். மேலும், என் மீது ஊழல் குற்றசாட்டு சுமத்த ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், மக்களவை தொகுதி வேட்பாளரான மரகதம் குமாரவேலை ஆதரித்து துணை ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மதுராந்தகம் மக்களவை தொகுதி வேட்பாளரான மரகதம் குமாரவேலுக்கு பதிலாக, மரகதம் சந்திரசேகர் என்று பெயரை மாற்றி கூறியுள்ளார். இதனால் தொண்டர்கள் மத்தியில், சலசலப்பு ஏற்பட்டது.